Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பின் பரிந்துரை அறிக்கையில் என்ன இருக்கிறது என்று  தெரியாது – சித்தார்த்தன்.    

<strong><span lang="EN-US">கூட்டமைப்பின் பரிந்துரை அறிக்கையில் என்ன இருக்கிறது என்று  தெரியாது – <strong>சித்தார்த்தன். </strong> </span></strong>
 

அரசியல் யாப்பு உருவாக்கத்திற்காக மைத்திரி ஒருபுறமும் ரணில் இன்னொருபுறமுமாக ஆலோசனை குழுக்களை அமைத்துள்ளனர். இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பரிந்துரை அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் அதில் என்ன இருக்கின்றதென்பது பங்காளிகளான எம்மில் எவருக்குமே தெரியாதென போட்டுடைத்துள்ளார் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்.

தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தற்போது புதிதாக கொண்டுவர முயற்சிக்கும் தொகுதிவாரியான தேர்தல்கள் பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையினரில் தங்கி நிற்கும் நிலமையை இல்லாது செய்யும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. அதேநேரம் இந்த நாட்டில் நாம் சமஸ்டிக் கோரிக்கையுடனேயே 40 ஆண்டுகாலமாக காத்திருக்கின்றோம். அதேபோன்று இந்த 40 ஆண்டுகளும் சிங்கள மக்கள் ஒற்றையாட்சிக்குள் வாழ்கின்றனர் அதற்கே வாக்களித்திருக்கின்றனர். அவ்வாறானால் எவ்வாறு பிரச்சினைகளுக்கான தீர்வை  எட்டுவது என்பதும் சவாலாகவே உள்ளது. இதே வேளை இன்னும் சில தினங்களில் நடவடிக்கை குழுவின் அறிக்கை வெளிவரும் என்று கூறப்படுகிறது. அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும். இவையெல்லாம் நடக்குமா அல்லது நடக்காதா என்று எனக்கும் தெரியாது என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

9/7/2017 1:47:53 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்