Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பந்தனே வலிந்து மகிந்தவை சந்தித்தாரா?

சம்பந்தனே வலிந்து மகிந்தவை சந்தித்தாரா?

சிறிலங்காவின் முன்ளாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரிலேயே தான் அவரை சந்தித்தாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பிற்கு ஆதரவு தருமாறு சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை மகிந்த மறுத்துவிட்டதாகவும் செய்;திகள் வெளியாகியிருந்தன. சம்பந்தன் - மகிந்த சந்திப்பை முதன் முதலான யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னாள் உதயன் பிரதம ஆசிரியரான வித்தியாதரனால் வெளியிடப்படும் காலைக்கதிர் பத்திரிகையையே பிரசுரித்திருந்தது. இதனைத் தொடர்ந்தே சம்பந்தன் - மகிந்த சந்திப்பு தொடர்பான செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. மிகவும் இரகசியமாக வைக்கப்;பட வேண்டும் என்னும் அடிப்படையில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

வழமையாக அனைத்து சந்திப்புக்களுக்கும் சுமந்திரனை அழைத்துச் செல்லும் சம்பந்தன் மேற்படி சந்திப்பிற்கு சுமந்திரனை அழைத்துச் சென்றிருக்கவில்லை. எனினும் சம்பந்தனுக்கு நெருக்கமான பத்திரிகை என்று கருதப்படும் காலைக்கதிர் பத்திரிகையின் மூலம் மேற்படி செய்தி கசியவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே சம்பந்தன் தானாகச் செல்லவில்லை மகிந்த அழைத்தே சென்றதாக கூறியிருந்தார். ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி சம்பந்தனே வலிந்து மகிந்தவை சந்தித்திருக்கின்றார். மகிந்தவிற்கு நெருக்கமான ஊடக வட்டாரங்கள் மூலம் இந்தத் தகவல் வெளியாயிருக்கிறது.

மகிந்தவின் தலையீடின்றி இலங்கையின் பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் சம்பந்தன் கூறியிருக்கிறார். இதற்கு பதிலளித்த மகிந்த அவ்வாறாயின் நான் அதிகாரத்தில் இருக்கும் போது ஏன் என்னிடம் வரவில்லை. அப்போது இவ்வாறு பேசியிருந்தால் நாம் பிச்சினைகளை தீர்த்திருக்கலாமே என்று கூறியிருக்கிறார். தானாக மகிந்தவை சந்தித்துவிட்டு அதனை பகிரங்கமாக கூறுவதற்கு துணிவற்றிருக்கும் சம்பந்தனின் செயல் சரியான ஒன்றல்ல என்று அரசியல் நோக்கர் கருதுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

9/7/2017 1:41:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்