Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை தோற்கடிப்பேன் – கோத்தாபய ராஜபக்ச

<p>புதிய அரசியல் யாப்பு முயற்சிகளை தோற்கடிப்பேன் – கோத்தாபய ராஜபக்ச</p>

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச தலைமையில், 'எலிய- ஒளிமயமான அபிலாசைகள்' என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச புதிய அரசியல் யாப்பை தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

'பிரிவினைவாதிகள் தீவிரவாதத்தின் ஊடாக  அடைய முடியாததை, புதிய அரசியலமைப்பு வழங்கும்.  இதனை தோற்கடிக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், ஒரு பகுதி வெளிநாட்டு சக்திகளை திருப்திப்படுத்தவே இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போருக்குப் பிந்திய சிறிலங்காவை இனரீதியாகப் பிரிக்கவே, தற்போதைய கூட்டு அரசாங்கம் வழிதேடுகிறது. பிரிவினைவாதஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை மக்கள் எதிர்க்க வேண்டும்.எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எலிய அமைப்பு அனுமதியாது. நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் வழி நடத்தவேண்டியது முக்கியம்.அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் போது,  அமைதியாக இருக்கமுடியாது.

இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளை பாதுகாக்க முற்பட்ட நாடுகளே இந்த அரசியலமைப்புஉருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கின்றன.புதிய அரசியலமைப்பை எலிய எதிர்க்கும். தீவிரவாதத்தை தோற்கடித்து பெற்றதை பாதுகாக்க வேண்டும்.விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இராணுவத்தினர் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். நாட்டின் இறைமை மற்றும்பிராந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் எந்த முயற்சிகளுக்கும், எந்த விலை கொடுத்தாவது எதிர்க்க வேண்டும்' என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

9/7/2017 3:46:00 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்