Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் அலட்சியமான பதில்!

எழிலன் எங்கே? ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் அலட்சியமான பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் எழிலனுடன் அவரது மனைவி அனந்தியும் இருந்திருந்தால் எழிலன் எங்கேயிருக்கிறார் என்பதை கண்டறிந்திருக்கலாம் என்றுஇலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பதிலளித்திருக்கின்றார்

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்பொன்று பிரேசில் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிய ஜெனரல் ஜெகத் சூரியமீது வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து இலங்கைக்கு திரும்பியிருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை கொழும்பு ஊடகம் ஒன்று செவ்வி கண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசனும், புலித்தேவனும் மரணமடைந்து விட்டனர் எனவும் அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராகச் செயற்பட்ட எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதற்கு தான் சாட்சியாக உள்ளதாகவும் அவரது மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என குறித்த ஊடகம் வினவியபோது,

யார் அவர் புலித்தேவனா? அவர் ஒருபோதும் சரணடைந்திருக்கவில்லை; அவர் மரணமடைந்துவிட்டார், நடேசனும் மரணமடைந்துவிட்டார். அவர்களது உடல்கள் அடையாளங் காணப்பட்டன எனத் தெரிவித்தபோது குறித்த ஊடகம் எழிலன் தொடர்பாகவே கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தமைக்கு,

எழிலனுடன் அவரது மனைவி அனந்தி உடனிருந்திருப்பாராக இருந்தால் அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரிந்திருக்கும் எனப் பதிலளித்துள்ளார்.

9/8/2017 9:56:00 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்